Followers

Tuesday, June 9, 2020

ஸ்டாலின் - 2016ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு..

ஸ்டாலின்
2016 குளத்தூர் MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நமக்கு நாமே திட்ட தலைவர்.
2016ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு...

தலைவர்களில் மிகவும் சாதாரண வருமானம், ஒரே ஒரு வீடு மட்டுமே கொண்ட பெருமைமிகு தலைவர் விபரங்கள்...

"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் எழுதாத தானே தலைவனின் செல்வன்.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

அரசாங்க பதிவின் படி..
யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

1.
பெயர்: ஸ்டாலின்
மனைவி: துர்காவதி


2.
ஸ்டாலின் அவர்கள் கையில் வைத்து இருந்த பணம் வெறும் 50 ஆயிரம் (50,000)

3.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - fixed deposit
வெறும் 1 லட்சம் (1,36,400)

4.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - மற்றொரு fixed deposit
வெறும் 10 லட்சம் (10,91,180)

5.
ஸ்டாலின் அவர்கள் பஞ்சாபி நேஷனல் வங்கி  fixed deposit
வெறும் 10 லட்சம் (10,85,862)

6.
ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவதி தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - (கணவன் மனைவி சேர்ந்து) savings account மொத்த பணம் 8 லட்சம் (8,63,612)
மனைவி 50% பங்கு வெறும் 4 லட்சம் (4,31,806)

7.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - savings account 50% பங்குவெறும் 4 லட்சம் (4,31,806)

8.
ஸ்டாலின் அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி - savings account வெறும் 10 லட்சம் (10,91,064)

9.
தேர்தல் செலவுக்காக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - savings account வெறும் 10 லட்சம் (10,01,000)

10.
அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் 12.5% ஸ்டாலின் அவர்களின் பங்கு மதிப்பு வெறும் 90 ஆயிரம் (90,930)

11.
தயாளு குடும்ப அறக்கட்டளையில் ஸ்டாலின் அவர்களின் மூன்றில் ஒரு பங்கு கொண்டுள்ளார்.
இந்த அறக்கட்டளைக்கு கீழ் மதுரை மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் காலி நிலம் உள்ளது. அதன் மதிப்பு வெறும் 30 லட்சம் (30,55,000)

12.
திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்தை கிராமத்தில் 3.85 ஏக்கர் 1989ல் 1 லட்சம் (1,08,000) போட்டு ஸ்டாலின் வாங்கினார். அதன் மதிப்பு 2016ல் 1 கோடி 82 லட்சம் (1,82,92,000)

13.
தஞ்சை மாவட்டத்தில் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.86 ஏக்கர் பூர்வீக சொத்தாக ஸ்டாலின் வைத்துள்ளார். அதன் மதிப்பு 2016ல் 3 லட்சம் (3,24,610)

14.
ஸ்டாலின் மனைவி துர்காவதி இருவர் பெயரில் உள்ள அசையா சொத்து ஒரு வீடு. no 5, ராணி தெரு, சீதாபதி நகர், வேளச்சேரியில் உள்ளது.
5833.2 சதுர அடி கொண்ட மொத்த கட்டிட பரப்பு, 1995ல் 9 லட்சத்துக்கு (9,18,210) வாங்கப்பட்டது.
அங்கு வீடு கட்ட 40 லட்சம் ஆனது (40,82,272).
2016ல் ஸ்டாலின் அவர்களின் பங்கு மதிப்பு 1 கோடி (1,27,89,136)
2016ல் மனைவி துர்காவதி அவர்களின் பங்கு மதிப்பு 1 கோடி (1,27,89,136)

15.
ஸ்டாலின் பெயரில் உள்ள மற்றொரு அசையா சொத்து ஒரு வீடு. no 5, சன்னதி தெரு, திருவாரூர் பூர்வீக சொத்தாக உள்ளது. இதில் 2700 சதுர அடி மட்டுமே இவர் பங்கு.
2016ல் இதன் மதிப்பு வெறும் 19 லட்சம் (19,45,000)

16
ஸ்டாலின் மனைவி துர்காவதி கையில் வைத்து இருந்த பணம் வெறும் 25 ஆயிரம் (25,000)

17.
ஸ்டாலின் மனைவி துர்காவதி தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - fixed deposit
வெறும் 10 லட்சம் (10,96,031)

18.
ஸ்டாலின் மனைவி துர்காவதி வைத்து இருந்த பழைய 720 கிராம் தங்கம் மதிப்பு 15 லட்சம் (15,73,000)

19.
மனைவி துர்காவதி 3680 சதுர அடியில் திருவள்ளூர் மாவட்டத்தில் (சர்வே எண்107/5,6,7), ப்ளாட் no 241,242, 1999ல் 87 ஆயிரம் (87,000) வாங்கினார். 2016ல் இதன் மதிப்பு 11 லட்சம் (11,04,000)


Govt Site:
http://affidavitarchive.nic.in/CANDIDATEAFFIDAVIT.aspx?YEARID=May-2016%20(%20GEN%20)&AC_No=13&st_code=S22&constType=AC

No comments:

Post a Comment